இந்தியா, ஜூன் 26 -- வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால் பல வகையான ராஜயோகங்கள் உருவாகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த ராஜயோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில், நவகிரகங்களில் முக்கியமானதாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சுப, அசுப பலன்களைத் தரக்கூடியவர். சனி பகவான் கர்மாக்களை நல்லது, கெட்டது என வகைப்படுத்தி மீண்டும் நல்ல பலன்களை தருகிறார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதேவேளையில் நவகிரகங்களின் இளவரசான கருதப்படும் புதன் ஜூன் 22 முதல் கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் நாளை மறுநாள் ஜூன் 28 ஆம் தேதி சனியும், புதனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் ...