இந்தியா, ஜூலை 18 -- உடலின் உள் உறுப்புகளில் கல்லீரலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இது அமைதியாக சேதமடைந்து இறுதியில் ஒரு பெரிய பிரச்னையாக மாறும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணரான பாலப்பன் மாணிக்கம் கல்லீரலில் கொழுப்பு படிதலால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் பற்றி விளக்கம் அளித்துள்ளார். கொழுப்பு பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் கல்லீரலுக்குள் குவியும் என தெளிவுபடுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் Fatty Liver என்று அழைக்கப்படும் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பை எவ்வாறு குறைக்கலாம், கல்லீரலில் கொழுப்பு அல்லது கல்லீரல் வீக்கம் உண்மையில் எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்படி, "கொழுப்பு கல்லீரல் நோய் அமைதியாகத் தொடங்கி காலப்போக்கி...