Chennai, ஜூலை 3 -- கடந்த 1987இல் வெளியான நாயகன் என்ற கல்ட் கிளாசிக் ஹிட் படத்துக்கு பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தக் லைஃப் திரைப்படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. ரசிகர்களை கவராமல் போன இந்த படம், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் படம் ரிலீசான ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது. அதுவும், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், புதன்கிழமை (ஜூலை 2) நள்ளிரவுக்குப் பிறகு ஸ்ட்ரீமிங் தொடங்கியுள்ளது.

கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ஸ்...