இந்தியா, ஏப்ரல் 26 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்கள் இடமாற்றம் செய்யும்பொழுது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அந்த காலகட்டத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

அந்த வகையில் வருகின்ற மே மாதம் மீன ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்றிணையப் போகின்றனர். மீன ராசியில் ராகு, சனி, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்று சேர்ந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்க உள்ளனர்.

சில ராசிக்காரர்கள் இந்த சதுர்கிரக யோகத்தின் மூலம் அற்புதமான பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ...