இந்தியா, ஏப்ரல் 8 -- பூண்டை வைத்து இப்படி ஒரு காரஞ்சாரமான சட்னியை நீங்கள் செய்து இருக்கமாட்டீர்கள். இது அத்தனை சுவையான சட்னி, இந்த சட்னியை நீங்கள் ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். இதன் சுவை உங்களை இந்த சட்னிக்கு அடிமையாக்கிவிடும். இதற்கு நிறைய பூண்டு தேவை. அதை உறிப்பதும் கடினம்தான். ஆனால் இதன் சுவையில் மட்டும் நீங்கள் மூழ்கிவிட்டீர்கள் என்றால், சிரமம் பார்க்காமல் பூண்டை உறித்து இந்த சட்னியை செய்துவிடுவீர்கள். மசால் தோசைகளில் ஸ்பிரட் செய்யவும் இந்தச் சட்னி ஏற்றது. இந்த சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்

* வர மிளகாய் - 6

* பூண்டு - 60 பல்

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

* உளுந்து - 2 ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - ...