இந்தியா, மார்ச் 24 -- தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில், 2026ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமைகள் பாதிக்கப்படும் அபாயத்தையும், மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி இந்தியாவில் முதன்முறையாக கடந்த 14.02.2024 அன்று ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 05.03.202...