இந்தியா, மார்ச் 15 -- சடாவரி என்று அழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த ஒரு வேர் பகுதி ஆகும். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் விளக்கியுள்ளார்.

சதாவரி என்று அழைக்கப்படும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு மனிதனுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. அடிப்படையில் மனித உடலுக்கு குளிர்ச்சியையும், தாது விருத்தியும், தேக வன்மையும் அளிக்கும் இந்த மூலிகை பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். ஆனால் இந்த மூலிகையை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியமாகும். என்னதான் இந்த கிழங்கு பெரும் நன்மைகளை உடலுக்கு அளிக்க வல்லது என்ற போதிலும் உடலின் தேவைக்கு ஏற்ப வாரம் ஒருமுறை என்ற விகிதத்திலிருந்து மாதம் ஒருமுறை என்ற வ...