இந்தியா, ஏப்ரல் 16 -- ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. 'சங்கடஹர' என்றால் துன்பங்களை அகற்றுபவர் என்று பொருள். நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்களை போக வைக்கக் கூடிய சதுர்த்தி என்பதால் இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இந்த விரதம் இருந்தால் நமக்கு ஏற்படும் சங்கடங்கள், இடையூறுகள் அனைத்தையும் விலகி நிம்மதியை அளிக்க கூடியதாக நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டின் முதல் சங்கடஹர சதுர்த்தி இன்று (ஏப்ரல் 16) கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ...