இந்தியா, ஏப்ரல் 16 -- நடிகர் நிழல்கள் ரவி கோவையைச் சேர்ந்தவர்.பி.எஸ்.ஜி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த இவர், கல்லூரி காலங்களில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோரின் படங்களைப் பார்த்து வளர்ந்தாராம்.

பின்னர், அவர்களைப் போலவே மிமிக்ரியும் செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என சென்னை வந்தவர், 1980-ல் பாரதிராஜாவின் நிழல்கள் படம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார்.

1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரவி இந்தப் படத்தின் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் அவருக்கு நிழல்கள் ரவி என்று அடையாளத்தை பெற்று கொடுத்தது. இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் ...