இந்தியா, ஏப்ரல் 27 -- கோவை விமான நிலையத்தில் முன் அனுமதி இன்றி மக்களை திரட்டி இடையூறு செய்ததாக கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

மேலும் படிக்க:- சேலம் பட்டாசு விபத்து! முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழக வெற்றி கழகத்தின் 2 நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கோயம்புத்தூர் வந்தடைந்த தவெக தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் கூடிய ஏராளமான இளைஞர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். மேலும், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டு, கருத்தரங்க அரங்கை நோக்க...