இந்தியா, மார்ச் 11 -- கோவை : வனத் துறையில் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வடமாநிலங்களை சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 - ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதி...