இந்தியா, ஏப்ரல் 27 -- கோவையில் நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் ரோட்ஷோ நடத்திய நிலையில், இன்றைய தினம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோட்ஷோ நடத்தினார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் ஏராளமாக விமான நிலையத்தில் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, பறை இசை, செண்டை மேளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரு புறங்களிலும் நின்று முழக்கங்களுடன் வரவேற்பு அளித்தனர். உதயநிதி, காரில் இருந்து வெளியே நின்று கையசைத்து தொண்டர்களுக...