இந்தியா, ஏப்ரல் 26 -- ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே பூத் கமிட்டி பயிற்சி பட்டறை நடத்தவில்லை மக்களுடன் ஒன்றிணையவே இந்த பயிற்சி பட்டறை என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கங்கள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது, இதில் முதல் கூட்டத்தை கொங்கு மண்டலத்தில் தவெக நடத்துகிறது. கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்கின்றனர். இந்த கருத்தரங்கம் தவெக...