இந்தியா, ஏப்ரல் 22 -- உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகளை கோயம்பேடு பேருந்ந்து நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவித்து, இன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோயம்பேடு வந்தனர். ஆந்திர மாநிலத்தைப் போல, உடல் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப மாத உதவித்தொகையை 6,000 முதல் 15,000 ரூபாயாக உயர்த்தவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி...