இந்தியா, மார்ச் 27 -- இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த மாதத்தில் நடுவில் ஒரு சில நாட்கள் லேசான மழை பெய்திருந்தாலும் மற்ற நாட்களில் கடுமையான வெயில் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்து இன்னும் சில தினங்களில் ஏப்ரல் மாதம் பிறக்க இருக்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழ்நாட்டின் வெப்பநிலையை யாராலும் கணிக்கவே முடியாது. அது மிகப்பெரிய அதிக அளவிலான உயரத்தில் கூட செல்லலாம். இது போன்ற சூழ்நிலைகளில் மக்கள் வெயிலில் தாக்குப்பிடிக்கவும், உடலின் வெப்பத்தை தணிக்க சில உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர்.

காலம் காலமாக வெயிலை தணிக்க நாம் வழக்கமாக குடிக்கும் பானங்களில் ஒன்றுதான் சர்பத். சர்பத் குடித்தால் சிறிதளவு தாகம் தீரும் எனவும் உடலில் வெப்பநிலை...