இந்தியா, ஏப்ரல் 10 -- கோடையில் இருக்கும் அதிகபட்ச வெயில் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு குளிர் பானங்கள் குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். நாம் உடலின் வெப்பத்தை தணிக்க பல விதமான செயல்பாடுகளில் ஈடுபடுவோம். அதில் ஒன்று தான் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது. தண்ணீர் அதிகமாக குடிக்கும் அதே நேரத்தில் குளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க அதிக அளவு திரவங்களை உட்கொள்வது அவசியம். கோடையின் அதிக வெப்பம் மிகுந்த தாகத்தையும் ஏற்படுத்துகிறது. தண்ணீர் மற்றும் பழங்கள் குடிப்பது உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கிறது.

உடலில் அதிக வெப்பம் இருக்கும்போது, ​​குளிர்ந்த நீரில் குளிப்பது ஆறுதலைத் தரும். வெப்பம், வியர்வை மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் பெற சிறந்த மற்றும் எளிதான வழி குளிர்ந்த குளியல் எடுப்பதாகும். குள...