இந்தியா, மார்ச் 12 -- மார்ச் மாதம் தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. கடந்த சில தினங்களாக மழை பெய்தாலும், மீண்டும் வெயில் வெளுக்க ஆரம்பிக்க போகிறது. இந்த அதிக அளவிலான வெப்பத்தால் நமது உடல்நிலை மிகவும் மோசமடையும். அதே போலத்தான் மற்ற உயிரினங்களும் கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். இந்த சமயத்தில் மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்களும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன. அதிலும் நாம் வீட்டில் வைத்திருக்கும் தோட்டங்களில் இருக்கும் செடிகள் மோசமாக பாதிக்கும். இதனை தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

சில தோட்டத் தாவரங்கள் கோடை வெயிலை உறிஞ்சும்போது செழித்து வளரும். சதைப்பற்றுள்ள தாவரங்கள் மற்றும் கற்றாழை போன்ற தாவரங்கள் வெப்பத்திற்கு நன்கு பொருந்துகின்றன, மேலும...