இந்தியா, ஏப்ரல் 16 -- கோடையின் வெப்பத்தை நீங்கள் குறைக்கவேண்டுமென்றால், அதற்கு நீங்கள் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பழங்களை சாப்பிடவேண்டும். இந்த பழங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமல்ல. இவை உங்கள் உடலின் சூட்டைத்தணிக்கவும் உதவுகின்றன. உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தையும் கொடுக்கின்றன.

தர்ப்பூசணி என்பது கோடையை குளுமையாக்கும் பழங்களுள் ஒன்றாகும். இதில் 92 சதவீதம் தண்ணீர்ச் சத்து உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கவல்லது. புத்துணர்வு தரும். உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுப்பதற்கு உதவும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளன. இது உங்கள் சருமம் ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் இருக்க உதவும்.

ஆரஞ்சு பழங்களில் சாறு நிறைந்துள்ளது. இதில் வைட்டமி சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் ச...