இந்தியா, ஏப்ரல் 4 -- சந்தையில் எண்ணற்ற சரும பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. இதில் பிரிசர்வேடிவ்களும், வேதிப்பொருட்களும் கலக்கப்படுகின்றன. இது உங்கள் சருமத்தை நாசமாக்கும். எனவே இயற்கையான மற்றும் வீட்டிலே செய்யக்கூடிய சரும பராமரிப்பு பொருட்கள் உங்களுக்கு மிகவும் உகந்தவையாகவும், சருமத்தை தொல்லை தராதவையாகவும் இருக்கும். இது உங்கள் அழகையும், பொலிவையும் பாதுகாக்கும். இது உங்களுக்கு பாதுகாப்பானது. எனவே கோடை காலத்தில் சரும வறட்சியைப்போக்க பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி என்ன பழங்களை சாப்பிடலாம் என்று பாருங்கள்.

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலின் உள்ளது. அன்னாசிப்பழம் சருமம் சிவத்தல் மற்றும் முகப்பரு தழும்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது வீக்கம் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கிறது. அன்னாசிப்பழத்தை அரைத்து தேனில் குழைத்து, உங்கள...