இந்தியா, ஏப்ரல் 23 -- ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இயக்கமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் மே மாதம் ஐந்தாம் தேதி அன்று நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் மற்றும் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான் இருவரும் ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் வருகிறார்கள். இதன் காரணமாக திரிகேதய யோகம் உருவாக உள்ளது.

குரு மற்றும் புதன் பகவான் அமைப்பினால் உருவாகக்கூடிய திரிகேதய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள்...