இந்தியா, மார்ச் 11 -- கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜராகி உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சிபிசிஐடி சிறப்பு விசாரணைக்கு குழுவினர் கையில் எடுத்தனர். இது வரை சுமார் 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலு...