இந்தியா, மார்ச் 23 -- இந்தியாவில் பிரபலமான சட்னிகளுள் ஒன்று மல்லிச்சட்னி. இடித இட்லி, தோசை மற்றும் சாட் வகைகளுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த மல்லி சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஓட்டல்களில் டிஃபன் சாப்பிடும்போது இந்த கிரீன் சட்னி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். நல்ல மணமும், சுவையும் கொண்டது இந்த சட்னி. இதற்கு மல்லித்தழை தான் முக்கியமான ஒன்று. இதன் நிறம், மணம் மற்றும் சுவை என அனைத்தும் ஒருவரின் தனிப்பட்ட சுவையைப் பொறுத்து அமையும். இதில் சேர்க்கப்படும் மல்லித்தழை ஃபிரஷ்ஷாக இருந்தால் சட்னி மிகுந்த சுவை கொண்டதாக இருக்கும். சட்னிக்கு நல்ல நிறமும் தரும். இந்த சட்னிக்கு வெங்காயம் மற்றும் தேங்காய் இரண்டும் முக்கிய உட்பொருட்கள் ஆகும். தாளிக்க கடுகு, உளுந்து, கறிவேப்பிலை என தேவைப்படும். இதைத்தவிர சேர்க்கப்படும் புளி சட்ன...