இந்தியா, மே 4 -- வேகவைத்த கொண்டைக் கடலையை நீங்கள் தினமும் ஒரு கப் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

வேகவைத்த கொண்டைக்கடலையில் தாவர அடிப்படையிலான புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது தசைகளை வலுவாக்கவும், திசுக்களை சரிசெய்யவும், ஒட்டுமொத்த உடலை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. உங்கள் உணிவில் அதிக புரதச் சத்துக்களை சேர்க்க விரும்பினால், அதற்கு இந்த கொண்டைக் கடலையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். வேகவைத்த கொண்டைக்கடலை செரிமான ஆரோக்கியத்துக்கும், குடல் இதமாக இயங்கவும் உதவுகிறது. இது மலச்சிக்கலைப் போக்குகிறது. குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர உதவுக...