இந்தியா, ஏப்ரல் 16 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கக்கூடியவர்.

சூரியன் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் மேஷ ராசியில் செல்லும் பொழுது சித்திரை மாதம் பிறக்கின்றது. அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரியன் மேஷ ராசியில் நுழைந்தார். இது கட்டாயம் அனைத்து தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சூரியன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் ...