இந்தியா, மே 8 -- நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் படிப்பு, வியாபாரம், கல்வி, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் கடந்த மே மாதம் ஏழாம் தேதி அன்று புதன் மேஷ ராசியில் நுழைந்தார். புதன் மற்றும் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத...