இந்தியா, ஜனவரி 12 -- உப்பு, மிளகு ரொட்டி, இது பூரிக்கான மாற்று என்று கூறலாம். எப்போதும் ஒரே மாதிரி ரெசிபியாக இல்லாமல் இதை செய்யும்போது வித்யாசமான சுவை நிறைந்ததாக இருக்கும். இது கொங்கு நாட்டு ஸ்பெஷல் என்று கூறலாம். இதை நீங்கள் ப்ரேக் பாஸ்ட் அல்லது மாலை ஸ்னாக்ஸ் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை நீங்கள் தேங்காய் சட்னியில் தோய்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இட்லி அரிசி - ஒரு கப்

துவரம் பருப்பு - கால் கப்

(இரண்டையும் அலசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்)

வர மிளகாய் - 2

மிளகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 15

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

எண்ணெய் - கால் லிட்டர்

ஒரு மணி நேரம் ஊறிய அரிசி மற்றும் துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் வர மிளகாய், மி...