இந்தியா, ஜூன் 12 -- கொங்குநாடு என்பது தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இது கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. சேரர்களால் ஆளப்பட்ட இப்பகுதியானது, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் மற்றும் தெற்கே பாண்டிய நாடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. தற்போது உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். கொங்கு நாட்டு சமையல் என்பது தமிழ்நாடு கொங்கு மண்டலத்தில் சமைக்கப்படும் பாரம்பரியமான உணவுகள் ஆகும். கொங்கு மண்டலம் ஒரு விவசாயப் பகுதி என்பதால், அங்கு சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். கொங்கு நாட்டு அசைவ உணவுகளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதில் இன்று கொங்கு நாட்டு வெள்ளை பிரியா...