இந்தியா, ஏப்ரல் 28 -- அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனுக்கான கையெழுத்திட்டு சென்றார்.

மேலும் படிக்க:- 'வடிவேலுக்கு வந்த கூட்ட எவ்ளோ தெரியுமா?' விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கையெழுத்திட வந்தார். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல...