சென்னை,சேலம்,மதுரை, ஏப்ரல் 4 -- பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு தரும் டாக்டர் சிவராமன், வீடியோ மூலம் நிறைய மருத்துவ குறிப்புகள் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சிறுநீர் பிரச்னைகள் குறித்தும், அதற்கு தீர்வு குறித்தும் விளக்கியுள்ளார். இதோ அவர் வழங்கும் டிப்ஸ்:

''சிறுநீர் போவதைக் கூட சிலர் அநாகரிகமாக நினைக்கிறார்கள். குறிப்பாக, அலுவலகங்களில் சிறுநீர் கழிப்பதை சிலர் அநாகரிகமாக கருதுகிறார்கள். பகல் முழுக்க 8 முதல் 10 மணி நேரம் பணியாற்றும் போது, சிறுநீர் கழிக்காமல் இருந்தால், தேக்க நிலையை உண்டாக்கிய பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நமக்கு நோய் வந்த பிறகு தான், நாம் தினசரி போகும் சிறுநீரின் அளவு குறைந்திருப்பதே பலருக்கு தெரியவரும். ஒருநாளைக்கு 3 லிட்டர் குடிநீர் பருகுகிறோம் என்றால், 2 லிட்டர் சிறுநீர் கழிவு போக வேண்டும்....