இந்தியா, ஏப்ரல் 25 -- கோடைகாலத்தில் பலவிதமான பழங்கள் அதிகமாக விளைச்சலை கொடுக்கின்றன. இந்த வகையான பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் எனவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஏனெனில் ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்களில் அந்த சீசனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாக பலாப்பழம் இருந்து வருகிறது. பலாப்பழம் என்ற உடனே திருநெல்வேலி மற்றும் கேரளா நகரங்கள் தான் நமக்கு ஞாபக நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு அப்பகுதிகளில் பலாப்பழம் அதிகமாக வளர்கிறது.

நாம் எப்போதும் பலாப்பழம் பழுத்த பின்னரே அதன் சுலைகளை சாப்பிடுவோம். அதுவும் தமிழில் கூறப்படும் முக்கனிகளில் ஒன்றாகவும் பலா இருந்து வருகிறது. இதன் தித்திக்கும் சுவையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும...