திருவனந்தபுரம்,சென்னை, மார்ச் 24 -- தமிழ் சினிமாவில் எப்போதும் கேரள நடிகைகளில் ஆதிக்கம் இருந்திருக்கிறது. ஆதிக்கம் என்பதை விட, அழகால் கட்டிப் போட்டவர்கள் என்று கூறலாம். கன்னடம், தெலுங்கில் இருந்து பல நடிகைகள் வந்தாலும், கேரள நடிகைகளுக்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் குறையாத அன்பை தந்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு நடிகைகள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ளனர். அந்த வகையில், கேரளாவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகள் சிலர் குறித்து இங்கே காணலாம்.

மேலும் படிக்க | Kerala Box Office : கேரள சினிமாவின் போதாத காலம்: 2025ல் 17 படங்கள் ரிலீஸ் ஆகி 11 தோல்வி!

ஷோபனா: கேரளாவை பூர்வீகமாக கொண்டவர், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனது நடிப்பால் பிரபலமானவர். அவர் ஒரு திறமையான பரதநாட்டியக...