இந்தியா, மே 13 -- வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக் கூடியவர் கேது பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கேது பெயர்ச்சி எப்போதும் 12 ராசிகளில் அமங்கலமான விளைவைக் கொண்டிருக்கிறது என்பதல்ல, கேது எந்த ராசிக்கும் அதன் நிலைக்கு ஏற்ப சுபமான மற்றும் அசுபமான பலன்களைத் தருகிறது. அந்த வகையில், இந்தாண்டு கேது தனது ராசியை மாற்றப்போகிறார். அதாவது மே 18, 2025 அன்று கேது கன்னி ராசியில் இருந்து விலகி சிம்ம ராசிக்கு செல்கின்றார். சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரியன்.

கேதுவின் சிம்ம ராசி பெயர்ச்சி மே 18, 2025 அன்று மாலை 04:30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்குப் பிறகு, 05 டிசம்பர் 2026 அன்று, கேது கடகத்தில் சஞ்சரிக்கிறார். கேதுவின் சிம்ம ராசிப் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்பட...