இந்தியா, ஜூன் 24 -- நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கிரகங்களின் மாற்றத்தால் பல யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்யப் போகின்றார். சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையின் காரணமாக குஜ் யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் கடந்த ஜூன் ஏழாம் தேதி என்று உருவானது.

கேது மற்றும் செவ்வாய் சிம்ம ராசியில் ஒரே நேரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இந்த குஜ் யோகம் உருவானது. இது 18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள...