இந்தியா, ஜூன் 15 -- உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்திலிருந்து குப்த்காஷிக்கு ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை துவங்கி நிலையில் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் இந்த மாதம் 3ம் தேதி திறக்கப்பட்டது. கேதார்நாத் ஹெலிகாப்டரில் இருந்து காலை 5.20 மணியளவில் புறப்பட்ட ஆர்யன் ஏவியேஷன் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர், பின்னர் அதிகாரிகளுக்கு சிக்னல் கிடைக்காததால் "காணாமல் போனது". மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) இன்ஸ்பெக்டர் அனிருத் பண்டாரி கூறுகையில், "ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரும் இறந்துவிட்டனர்." பலியானவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேப்டன...