கொல்கத்தா, ஏப்ரல் 30 -- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

'கொல்கத்தாவில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,'

என்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கொல்கத்தாவில் உள்ள பால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஒரு ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதில் மூன்று பேர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது...