இந்தியா, பிப்ரவரி 25 -- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கெளதம் மேனன். இயக்குநராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் போன்ற ஜானர்களில் இவர் படங்கள் இயக்கியிருந்தாலும், சிறந்த ரெமான்ஸ் படங்களின் இயக்குநர், ஃபீல் குட் படங்களின் இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தனது படங்களில் திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனங்கள், ஆர்டிஸ்ட்களின் காஸ்ட்யூம் உள்பட அனைத்து விஷயத்திலும் தனித்துவம் காண்பித்து ஸ்கிரீன் பிரெசன்ஸில் ரிச் லுக்கை கொண்டு வரும் இயக்குநராக திகழ்ந்து வருகிறார்.

கேரளாவில் உள்ள பாலக்காடு, ஓட்டபல்லத்தில் பிறந்த கெளதம் மேனன், சென்னையில் தான் வளர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சி...