இந்தியா, மே 14 -- கெட்டி மேளம் சீரியல் மே 14 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசி கழுத்தில் தாலிகட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| 'கெனிஷா உண்மை ஒரு நாள் வெளிவரும்.. தலை நிமிர்ந்து நில்'.. பாடகி கெனிஷாவிற்கு ஆறுதல் சொன்ன தோழி

அதாவது, துளசி கழுத்தில் தாலி எப்படி வந்தது என தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்து கலங்கியபடி இருக்க வெற்றி தாலி கட்டியது நான் தான் என்று சொல்ல முடிவெடுத்து கிளம்பி வருகிறான். அப்போது முனுசாமியும் ஈஸ்வரமூர்த்தியும் இதுவரை எதிரிகளாக இருந்த நாங்கள் சம்மந்தியாக போறோம், வெற்றிக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் என ...