இந்தியா, பிப்ரவரி 25 -- கெட்டி மேளம் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அஞ்சலி மற்றும் மகேஷ் என இருவருக்கும் நலங்கு வைக்கின்றனர், தீபாவின் அம்மா அவளிடம் உனக்கும் இப்படியெல்லாம் செய்து பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை என் வருந்துகிறாள்.

இதனை தொடர்ந்து மகேஷ் அஞ்சலியை கூப்பிட்டு இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மூமென்ட்.. அதனால் போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று சொல்லி அஞ்சலியுடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்து கொள்ள இதை ...