இந்தியா, மார்ச் 14 -- அஞ்சலியை கலாய்த்த ரவுடிகள்.. ஆவேசமான மகேஷ், சிவராமன் கொடுத்த பதிலடி! - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி வெற்றிக்கு போன் செய்து, அவனை பற்றியே பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வெற்றி வீட்டில் இருக்க, அப்போது ஈஸ்வரமூர்த்தி சீக்கிரம் ரெடியாகு என்கிறார். உடனே வெற்றி எதுக்கு பா என்று கேட்கிறான். உன்னை மாப்பிள்ளை பார்க்க வராங்க என்று சொல்ல, வெற்றி அதிர்ச்சி அடைகிறான்.

அப்பா எல்லாத்தையும் எலக்ஷன் முடிந்த பிறகு பாத்துக்கலாம்னு தானே சொல்லி இருக்கேன், அப்படி இருக்கும் போது, எதுக்கு இந்த ஏற்பா...