இந்தியா, மார்ச் 11 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி கதவை திறக்க முயற்சி செய்து, பிறகு வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க!

அதாவது, மகேஷ் வீட்டிற்கு வந்ததும், அஞ்சலி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்லி அவனது கண்களை மூடி அழைத்து சென்று பொருட்களை இடம் மாற்றி வைத்ததை காட்டினாள். மகேஷ் டென்ஷனான். தொடர்ந்து, அஞ்சலியை திட்டி விடுகிறான். இதனால், அஞ்சலி சோகமாகி ரூமுக்கு சென்று விடுகிறாள்.

இதனை தொடர்ந்து இங்கே சிவராமன் ஆபிசில் இருந்து வீட்டிற்கு வர, தியா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க, என்கூட விளையாட யாருமே...