இந்தியா, மார்ச் 3 -- 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாஹிர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அதில் அவர் பேசும் போது, ' ரஜினிகாந்த் இந்த வயதிலும் படப்பிடிப்பில் அவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறார். ஆடைகளை மாற்றிக்கொள்வது, சாப்பிடுவது, சுற்றுவட்டாரத்தில் சரியான சூழ்நிலை இல்லாத போது மட்டும்தான் அவர் கேரவனுக்குச் செல்வார். லோகேஷ் கனகராஜ் டேக் என்று சொன்னவுடன் அவர் இயல்பாகவே ஸ்டைல் மன்னனாக மாறி விடுவார்' என்று பேசினார்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறா...