இந்தியா, ஜூலை 22 -- மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை முன் வைத்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பிரச்சாரத்தை முன்னிருத்தி பொதுமக்களிடம் உரை நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே ஆங்கில நாளிதழான 'தி இந்து'வுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகளை பார்க்கலாம்.

கேள்வி: பாஜகவுடனான கூட்டணியை 2023ஆம் ஆண்டில் முறித்துக்கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள கூட்டணி ஆட்சியில் தாங்களும் அங்கம் வகிப்போம் என்று பாஜக தலைமை திரும்பத் திரும்ப கூறி வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண...