இந்தியா, ஏப்ரல் 17 -- செவ்வாய் தோஷம்: மகனுக்கோ, மகளுக்கோ திருமண பேச்சை ஆரம்பித்தவுடன் பெற்றோரை பாடாய்படுத்தும் விஷயம் செவ்வாய் தோஷம்தான். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான் இதற்கு காரணம். செவ்வாய் தோஷம் என்ற ஒற்றை காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் காண்கிறோம்.

செவ்வாய் தோஷம் என்றவுடன் பயம், பீதி அடைகிறார்கள். உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது உயிர் போகும் அளவிற்கு கொடுமையான விஷயம் இல்லை. ரத்தத்தின் காரக கிரகம் செவ்வாய். செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும். அது சிலருக்கு கோபமாகவும், சிலருக்கு வேகமான செயல்பாடுகளாகவும், சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும்.

செவ்வாய் ஆதிக்கம் உடையவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித...