இந்தியா, ஏப்ரல் 13 -- எல்லா விஷயங்களையும் எல்லாரும் குழந்தைகளுக்கு கற்பித்து விட முடியாது. எனவே தந்தை மட்டுமே எந்த விஷயத்தைக் கற்றுக்கொடுக்க முடியும் என்று பாருங்கள். வாழ்க்கையில் சில பாடங்களை தந்தையிடம் இருந்து மட்டுமே வரும். உண்மைகள், அன்பு மற்றும் எல்லையில்லா ஞானம் என டீன் ஏஜ் குழந்தைகளிடம் அப்பாக்கள் மட்டுமே கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக வளர்வார்கள்.

ஒரு தந்தை தான் தன் மகனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். அவர்கள் எவ்வாறு பெண்களை மரியாதையுடன் நடத்துகிறார் என்பதை மகன்கள் முன்னுதாரணமாகக் கொள்கிறார்கள். அவர்கள் பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், அன்புடனும் நடத்தவேண்டும். அவர்களின் வார்த்தைகள், செயல்கள் என அவர் தனது மனைவி மற்றும் தாயை எவ்வாறு நடத்துகிறார் என்பதை மகன்கள் பார்க்கிறார்கள்....