இந்தியா, ஏப்ரல் 20 -- குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது ஒரே இரவில் நடந்துவிடாது. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை என்பது படிப்படியாகத்தான் வளரும். அதற்கு அவர்களை வீட்டில் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதும் காரணமாகிறது. நீங்கள் இந்த பழக்கங்களை வீடுகளில் நடைமுறைப்படுத்தினால் அது குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து அவர்களை பாதுகாப்பான குழந்தைகளாக வளர வழிவகுக்கிறது. அது என்னவென்று பாருங்கள்.

அவர்களுக்கான உடைகளை தேர்ந்தெடுப்பது அல்லது அவர்களுக்கான உணவை தேர்ந்தெடுப்பது என நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு உரிமையைக் கொடுக்கலாம். இதனால் அவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள முடியும். இந்த எளிய பழங்கங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முடிவெடுக்கும் திறனை அதிகரித்து, உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும். அவர்களுக்காகன அவர்கள் யோசிக்கும் திறனை...