இந்தியா, ஜூன் 17 -- ஒரு நேர்மறையான உறவுக்கு குழந்தைகள் பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவவேண்டும். நல்ல ஒரு சூழலை அவர்களுக்கு உருவாக்கத்தரவேண்டும். எனவே உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அனைத்துக்கும் மேல் குழந்தைகள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும்தான். அவர்களை அணைத்துக்கொள்வது, முத்தமிடுவது மற்றும் நன்றாக பேசுவது, ஒரு பாதுகாப்பான சுற்றத்தை உருவாக்குவது, அவர்களுக்கு உணர்வு ரீதியான சூழலை உருவாக்குவது உங்களின் பொறுப்பு. இதைத்தான் குழந்தைகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து செலவிடும் நேரம் மிகவும் முக்கியமானது. தங்கள் பெற்றோர் தங்களுடன் நேரத்தை செலவிடவேண்டும் என்று அவர்கள...