இந்தியா, ஏப்ரல் 25 -- குழந்தைகள் தவழும் பருவத்தில் குழப்பங்களும், அன்புமாக இரண்டும் கலந்திருக்கும் பருவமாகும். இந்த நேரத்தில் தினமும் உங்களின் பொறுமை சோதிக்கப்படும். குழப்பம், கூச்சல், ஓட்டம், ஆச்சர்யங்கள் என எண்ணற்ற கலவையான உணர்வுகள் வெளிப்படும். ஆனால், சில விஷயங்கள் குறித்து உங்களிடம் யாரும் இதுவரை கூறியிருக்கமாட்டார்கள். உங்களின் குழந்தையை வளர்க்கும்போது உண்மையில் என்ன நடக்கும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் தவழும் குழந்தைகள் நீண்ட நேரம் அமைதியாக இருப்பதுதான் உங்களை அச்சுறுத்தும் செயலாக இருக்கும். அமைதியாக இருப்பது நல்லதுதான். ஆனால் இந்தப்பருவத்தில் குழந்தைகள் அமைதியாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு சவாலான விஷங்களை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் அமைதியாக இருக்கும்போது உங்களின் ஃபோனை கழுவிக்கொண்டு இருப்பார்கள் ...