இந்தியா, மார்ச் 15 -- உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டிய பாடங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பு அன்பு, சவால்கள் மற்றும் கற்றல் அனுபவங்கள் நிறைந்தது. 13 வயதில் குழந்தைகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்துவிடவேண்டும். அவர்களுக்கு முக்கிய பாடங்களை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். அது அவர்களுக்கு வளரிளம் பருவத்திற்கும், வளர்ந்த பருவத்தையும் தன்னம்பிக்கையுடன் கடக்க உதவும். குழந்தைகள் 13 வயதை நெருங்கும் முன் நீங்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பாடங்கள் என்னவென்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அதுதான் எந்த உறவுக்கும் நம்பிக்கையான அடித்தளம். அவர்களுக்கு உண்மை, கடின காலமாக இருந்தாலும் உண்மையாக இருப்பது அவர்களுக்கு வலுவான நன்னெறிகளை வளர்க்க உதவும். வெளிப்படையான உரையா...