இந்தியா, ஏப்ரல் 8 -- ஒவ்வொரு குழந்தைக்கு சில நேரங்களில் ஆத்திரம் அதிகம் வரும். கோவம் அளவாக வருவது சரியானதுதான். கோவம் மற்ற உணர்வுகளைப்போல் வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதுவே அதிகமாகும்போதும், அதை குழந்தைகள் எவ்வாறு கையாள்கிறார்கள் எனும்போதும் மிகவும் கவனிக்கப்படவேண்டியதாகிறது. குழந்தைகள் அவர்களின் மனஅமைதியை இழக்கும்போது, கோவம் கொள்கிறார்கள். தண்டனைகள் கொடுப்பது அல்லது மீண்டும் கத்துவது என அனைத்தும் சூழலை மேலும் மோசமாக்கும். கோவத்தில் கொந்தளிக்கும் உங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தும் வழிகளைப் பாருங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு கோவம் வரும்போது, அவர்கள் கொந்தளிப்பார்கள். அப்போது அவர்களின் அளவுக்கு இறங்கி அவர்களின் கண்களைப் பார்த்து, மெதுவாக அவர்களிடம் நீங்கள் கூறுவேண்டியது என்ன தெரியுமா? 'உனக்கு ஏதோ பிரச்னை உள்ளது?' என்று நீங்கள் கூறும்போது, அது...