இந்தியா, மார்ச் 20 -- பெற்றோர்கள் பேசும் வார்த்தைகள்தான் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் மனநிலை ஆகிய இரண்டையும் வடிவமைக்கின்றன. சில விஷயங்களை கூறும்போது, அது குழந்தைகள் இயற்கையிலேயே தன்னம்பிக்கையை இழக்க காரணமாகிறது. இதனால் உணர்வு ரீதியான வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே சில தவறுகளை நீங்கள் தவிர்க்கவேண்டும். அதற்கு உங்களுக்கு நேர்மறையான, ஆதரவான மற்றும் நல்ல ஒரு சுற்றுப்புறம் இருக்கவேண்டும்.

உங்கள் குழந்தைகளை சோம்பேறிகள் என்று கூறுவதற்கு பதில் நீங்கள், அவர்களிடம் நாம் சிறிது நேரம் உருப்படியாக எதையாவது செய்யலாமா என்று கூறுங்கள். இது அவர்களை ஊக்கப்படுத்தும். இதனால் அவர்கள் ஊக்கம் குறையமாட்டார்கள்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். நீங்கள் சோர்வாக உள்ளீர்கள் என்பது தெரியும், அதுகுறித்து பேசவேண்டுமா என்று உங்கள் குழந்தைகளிடம் ந...